AD

பட்டம் கொடுத்த விஜய் ஆண்டனி

அர்ஜூன், விஜய் ஆண்டனி, ஆஷிமா நர்வல், நாசர், சீதா ஆகியோர் நடித்து திரைக்கு வந்துள்ள படம் கொலைகாரன். இந்தப் படத்தை ஆண்ட்ரு லுயஸ் இயக்கியிருந்தார்.

படம் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து  ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. அர்ஜூன், விஜய் ஆண்டனி, ஆஷிமா நர்வல், டைரக்டர் சசி, விஜய் மில்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது விஜய் ஆண்டனி தெரிவித்ததாவது,

 பல படங்கள் தோல்வியாக அமைந்த நிலையில், இந்த கொலைகாரன் எனக்கு வெற்றியை கொடுத்துள்ளது. இந்த வெற்றிக்கு அர்ஜூன் முக்கிய காரணம்

இந்த படத்தில் பல காட்சிகளில் மிக ஸ்டைலாகவும்  நடித்திருந்தார் அர்ஜூன். அதனால் ஆக்சன் கிங் அர்ஜூனான அவருக்கு இந்த படத்தில் இருந்து ஆக்ஷன் ஸ்டைல் கிங் என்ற பட்டத்தை கொடுக்கிறேன் என்று சொன்னார் விஜய் ஆண்டனி.





#VijayAntony  #ArjunSarja #tamilcinemaking