AD

இது வெறும் நிகழ்ச்சி அல்ல! நம்ம வாழ்க்கை! பிக் பாஸின் புதிய ப்ரொமோ!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3,வருகிற ஜூன் 23 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோஷன் வீடியொ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 நிகழ்ச்சிகள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றன. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 3 ஜூன் 23 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 –ல், யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்பது பற்றி சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது சீசன் 3-யின் புதிய ப்ரோமோஷன் வீடியொ வெளியானது, பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இதற்குமுன் நானி தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது ஸ்ரீரெட்டியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், ஸ்ரீரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என்று நானி கூறிவிட்டார்.

இந்நிலையில் தெலுங்கில் பிக்பாஸ் விரைவில் துவங்குகிறது. அதில் பங்கேற்க பிரபல தெலுங்கு காமெடி நடிகர் சுனில் என்பவரை அணுகியுள்ளனர். அதற்கு அவர் தனக்கு ஒரு நாளுக்கு மட்டும்  25 லட்சம் கொடுத்தால் பிக்பாஸ்க்கு  வருகிறேன் என அதிரடியாக கூறி  அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

#BigBossNews #BigBossContestants #BigBossUpdate #BigBossTamil #BigBossTelugu #BigBoss3 #KamalHassan #ActorNani #LatestCinemaNews #LatestCinema #LatestCinemaUpdate #TamilCinemaKing #TamilCinemaNews #BollywoodNews #KollywoodNews #TollywoodNews