AD

சரத்குமார் பற்றி பேச விஷாலுக்கு அருகதை இருக்கா - ராதிகா..!!


நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடக்கிறது. இதில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் போட்டியிடுகிறது. இந்நிலையில் பாண்டவர் அணி சார்பில் வெளியிடப்பட்ட பிரசார வீடியோவில், சரத்குமார், ராதாரவியால் நாடக நடிகர்கள் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகையும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி, விஷாலுக்கு எதிராக அறிக்கை ஒன்றை இன்று காலை வெளியிட்டார். 

இதையடுத்து சரத்குமார் மனைவி ராதிகாவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ஒட்டி, பாண்டவர் அணியினர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், சரத்குமார் தலைவராக இருந்த போது எதையும் செய்யவில்லை என்றும் முறைகேடாக செயல்பட்டார்கள் என்றும் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பேசிய பழைய பல்ல வியை, வெட்கமே இல்லாமல் மீண்டும் வெளியிட்டுள்ளது, பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி வேடிக்கையாக இருக்கிறது. 


#ActorVishal #NadigarSangamElections #VishalControversy #NadigarSangamElections2019 #Radharavi #SarathKumar #VaralakshmiSarathkumar #RadhikaSarathkumar #TamilCinemaKing #TamilCinemaNews #LatestCinemaNews #KollywoodNews #BollywoodNews #LatestCinemaNews #LatestCinemaUpdate