AD

அபிராமி மீராவிற்கும் என்ன தொடர்பு.!

கடந்த இரண்டு நாட்களாக காரசாரம் இல்லாமல் போய்க்கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மீரா மிதுனின் வருகைக்கு  பின்னர் படு ஜோராக சூடு பிடித்துள்ளது.  மீராவை  பிக் பாஸ் வீட்டில் கண்ட உடன் முகத்தில் அப்படி ஒரு வெறுப்பு  அபிராமிக்கு

டாஸ்க் என்ற பெயரில் மீரா  பங்கமாக காலாய்த்தும் விட்டார்  அபிராமி. மேலும், மீரா மிதுனை தனக்கு நன்றாக தெரியும் அவர் செய்த் பிராடுத்தனமும் எனக்கு தெரியும் என  கூறிய அபிராமி, இது போன்ற ஆட்களைஎல்லாம் ஏன் இங்கு அனுப்பு கிறார்கள் என்று கொஞ்சம் என்று ஓவராகவே பேசி இருந்தார்.
இந்த நிலையில் மீரா மிதுனுக்கும், அபிராமிக்கு என்ன சம்மந்தம் என்று பார்க்கும் பொழுது  இந்த புகைப்படம். மீரா மிதுன் கடந்த 2016 சில அழகி போட்டிகளில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும், அந்த வகையில் 2017 ஆம் ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி போட்டி நிகழ்ச்சியில் அபிராமியும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இந்த அழகி போட்டியில் பவித்ரா என்பவர் வின் பண்ணுகிறார்  இதில் கவனிக்கபட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த பட்டத்தை முன்னாள் அழகியான மீரா மிதுன் தான்  வழங்குகிறார். அதே மேடையில் தான் அபிராமியும் நின்றுகொண்டிருக்கிறார்.
இப்படி துறை ரீதியாக அபிராமிக்கு, மீராவை  நன்றாகவே தெரியும். ஆனால், கடந்த சில மாதங்களாக மீரா பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டது அபிராமிக்கு நன்றாகவே தெரியும் என்பதால் தான் மீரா மிதுனை இந்த அளவிற்கு வெறுக்கிறார் அபிராமி. இருப்பினும் இவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் என்ன பிரச்சனை என்று தான் புரியவில்லை.