AD

கவுண்டமணியான யோகிபாபு

கவுண்டமணியின் இடத்தை நிரப்ப இன்னும் எந்த காமெடியனும் வரவில்லை. என்றாலும், அவரை பின்பற்றி சிலர் நடிக்கிறார்கள். அந்த பட்டியலில் யோகிபாபுவும் இப்போது இணைந்துள்ளார். 

சாம் ஆண்டன் இயக்கிய கூர்கா என்ற படத்தில் நடித்துள்ள யோகிபாபுவுக்கு ஜோடியாக எலிசா என்ற கனடா நாட்டு நடிகை நடித்துள்ளார். 

இந்த எலிசாவை பார்த்ததுமே மற்ற ஹீரோக்களைப்போன்று யோகிபாபுவிற்கும் கண்டதும் காதல் வந்து விட, கனவில் டூயட் பாடுவாராம். 

அந்த பாடல் காட்சியில் மேட்டுக்குடி படத்தில் நக்மாவுடன் கவுண்டமணி விதவிதமான உடையணிந்து டூயட் பாடியது போன்று யோகிபாபுவும் நடித்துள்ளாராம். 

ஆக, நான் ஹீரோவாக நடிக்க மாட்டேன். டூயட் பாட மாட்டேன் என்று சொல்லி வந்த யோகிபாபுவும் இப்போது கலர் கலராக உடையணிந்து டூயட் பாட தொடங்கிவிட்டார்.


 #YogiBabu  #Goundamani