AD

ஒரே காட்சியில் தந்தை-மகனாக விஜய்

நடிகர் விஜய் மூன்றாவது முறையாக அட்லியுடன் இணைந்துள்ள படம் விஜய் 63.

இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, உடன் கதிர், யோகிபாபு, விவேக், ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

இதேவேளை விஜய் - விவேக் இணைந்து நடிக்கும் 13 வது திரைப்படம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, விஜயின் பிறந்த தினமான ஜூன் 22 ஆம் திகதி படத்தின் First Look போஸ்டர் வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு, ஏர்.ஆர்.ரகுமான்   இசையமைக்கிறார்.

இந்த நிலையில் தற்போது, படத்தை பற்றி புதியதொரு தகவல் வெளியாகியுள்ளது. விஜய் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். 

ஏற்கனவே, அழகிய தமிழ் மகன், கத்தி படங்களில் இரட்டை வேடங்களில் விஜய் நடித்துள்ள விஜய் இந்தப் படத்திலும் தந்தை - மகன் என இரு வேடங்களில் தோன்றுகிறாராம். 

தந்தை விஜய் மற்றும் மகன் விஜய் ஒரே காட்சியில் தோன்றுவது போன்று காட்சியமைக்கப்பட்டுள்ளதாம். இதற்கு முன்பாக மெர்சல் படத்தில் தந்தை மற்றும் மகன் என மெர்சல் படத்தில் தோன்றியிருந்தாலும் ஒரே காட்சியில் இடம் பெறுவது போன்று காட்சிகள் அமைக்கப்படவில்லை. 

ஆனால், இந்த படத்தில் தந்தை விஜய் மற்றும் மகன் விஜய் ஒன்றாக தோன்றுவது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.


#Vijay  #Atlee  #ARRahman #tamilcinemaking