AD

இன்று வெளியாகும் சல்மான்கானின் பாரத்

நடிகர் சல்மான்கான் நடித்துள்ள பாரத் திரைப்படம் இன்றையதினம் வெளியாகவுள்ளது.

இதையொட்டி மும்பையில் நடைபெற்ற அறிமுக விழாவில், சல்மான் கான், கத்ரினா கைஃப், தபு, கரிஷ்மா கபூர், நேஹா துபியா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

தாதா சாகிப் பால்கே  விருது பெற்ற மூத்த நடிகரும் இயக்குனருமான மனோஜ்குமார், தனது சொந்தப் படங்களில் எல்லாம் தனது கதாபாத்திரத்திற்கு பாரத் என்றுதான் பெயரிட்டார். 

அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இப் படத்திற்கு பாரத் என்ற பெயர் வைத்திருப்பதாக சல்மான் கான் தெரிவித்துள்ளார்.



#Salman_Khan #tamilcinemaking