விஷ்ணு விஷாலுடன் இருக்கும் பெண் யார்..!!
நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த நிலையில் அவர் நடிகை அமலாபாலை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் வதந்திகள் பரவியது. ஆனால் இதற்க்கு விஷ்ணு விஷால் உடனே மறுத்தார்.
இந்த நிலையில் இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த பெண் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா குட்டா என்பது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணு விஷால் இந்த புகைப்படத்தை பதிவு செய்த டுவிட்டில் வேறு எந்த விபரமும் தெரிவிக்கவில்லை என்பதால் அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும் தங்கள் இஷ்டத்திற்கு கற்பனைகுதிரையை அவிழ்த்துவிட்டுள்ளனர். விஷ்ணுவின் புதிய காதலி என்றும், விஷ்ணுவின் அடுத்த பட நாயகி என்றும், விஷ்ணு பேட்மிண்டன் விளையாட போகிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்த கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஜூவாலா குட்டாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு விஷ்ணு இல்லை என்று பதிலளித்துள்ளார்.
இதுபோன்ற வதந்திகளை தவிர்க்க விஷ்ணு விஷாலே தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
#VishnuVishal #Latestnews #Tamilcinemaking

Post a Comment