AD

குத்துச் சண்டையில் அருண் விஜய்

உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டும் கதாநாயகர்களில் அருண் விஜய்யும் ஒருவர்.

இதற்காக அவர் `ஜிம்’முக்கு போய் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார். ஒரு அதிரடி கதாநாயகனுக்கே உரிய கம்பீர தோற்றம் கொண்ட இவர், நல்ல கதையம்சம் கொண்ட படங்களையே தேர்வு செய்து நடித்தும் வருகிறார்.

சமீபத்தில் திரைக்கு வந்த ”தடம்” இந்தப் படம் அருண் விஜய்க்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. படமும் வெற்றி பெற்று அமோக வசூலை பெற்று கொடுத்தது. 

இதையடுத்து அருண் விஜய், `பாக்ஸர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் குத்து சண்டை வீரராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரித்திகாசிங் நடிக்கிறார்.



   #ArunVijay #cinesamugam