AD

இசை ஆல்பத்தில் கைகோர்க்கும் அப்பா-மகன்

ஏ.ஆர்.ரகுமானின் மகன் ”ஏ.ஆர்.அமீன் சகோ” என்ற இசை ஆல்பத்தை ரகுமானுடன் இணைந்து தயாரித்துள்ளார். 

அப்பாவும் மகனும் இணைந்து,  ”ஏ.ஆர்.அமீன் சகோ” என்ற இசை ஆல்பம் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.

அப்பா ரகுமான் இசை அமைக்க, மகன் அமீன் பாடி உள்ளார். இதன் வீடியோ காட்சிகளை அமித் கிருஷ்ணன் இயக்க  சோனி நிறுவனம் வெளியிடுகிறது.

இசை ஆல்பம் பற்றி ஏ.ஆர்.அமீன் கூறியதாவது,

நான் என் இசைப் பயணத்தை சகோ உடன் தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் கொள்கிறேன். இப்பாடலை தந்தையுடன் சேர்ந்து தயாரிப்பது பெரும் சவாலாக இருந்தது. 

ஆனால், அதே சமயம் பெரும் மகிழ்ச்சியையும் அளித்தது. மக்கள் என் பாடலைப் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன். ஓர் அன்பான வரவேற்பை பெறுவேன் என்று நம்புகிறேன். என்றார்.

பாடலைப் பற்றி ஏ.ஆர்  கூறியதாவது,

ஒரு இசை அமைப்பாளராகவும் ஒரு இசை தயாரிப்பாளராகவும், நூற்றுக்கணக்கான பாடகர்கள் எனது பாடல்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட அவர்களின் பங்களிப்பு 25 ஆண்டுகளுக்கும் மேலாக நமது வாழ்வை இசை வழியே மேம்பட செய்திருக்கின்றன. 

அமீனுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு இப்பாடல் அனைத்து இசை ரசிகர்களின் உள்ளத்திலும் ஒரு தனி இடத்தைப் பிடிக்கும் என நம்புகிறேன். என்றார்.


#ARRahman  #ARAmeen #cinesamugam