AD

பிக்பாஸ் - 3 நிகழ்ச்சிக்கு தடையா..?


பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்தியன் பிராட்காஸ்ட் பவுண்டேஷனின் தணிக்கை சான்று பெறாமல் ஒளிபரப்பக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வரும் 23ம் தேதி துவங்க உள்ளது. முதல் இரண்டு சீசன்களை போன்றே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாஸனே தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.  பிக்பாஸ் நிகழ்ச்சியை தணிக்கை செய்யாமல் ஒளிபரப்பக்கூடாது என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் மனுதாக்கல் செய்தார். மனுவில் கவர்ச்சியான உடை, இரட்டை அர்த்த வசனங்கள் அதனை பார்க்கும் இளைஞர்களையும், பார்வையாளர்களையும் பாதிக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

#BiggBoss3 #BiggBoss3Tamil #BiggBoss3Promo #Bigboss3tamilpromo #KamalHaasan   #VijayTV