AD

நடிகை அனுஷ்கா எழுதும் Story!!!

தமிழ், தெலுங்கு படவுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார் எனலாம். இவர் பாகுபலியில் ஏற்று நடித்த தேவசேனா கதாபாத்திரம் இன்னும் ரசிகர் மனதில் நிலைத்து நிற்கின்றது.

அனுஷ்கா நடிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த இஞ்சி இடுப்பழகி, தெலுகிங்கில் "சைஸ் zero" என்ற பெயரில் வெளிவந்தது. இதில் அனுஷ்காவுடன் ஜோடியாக ஆரியா நடித்திருந்தார். இந்த படத்தின் கதை குண்டான ஒரு பெண் தன்னுடைய உடல் எடையை குறைக்க எவ்வளவு முயற்சி எடுக்கிறார் என்பதுதான் கதை. ஒரிஜினலாக இருக்க வேண்டும் என்பதால் ஏராளமாக உடல் எடையை ஏற்றினார். அனுஷ்காவின் துரதிஷ்டம் அவரின் ஏற்றிய உடல் எடை குறைக்க முடியவில்லை. இத்தனைக்கும் இவர் ஒரு யோகா ஆசிரியரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இவர் நியூரிசன் லூக் கோட்டின்ஹோ உதவியுடன் படி படியாக தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார். தற்பொழுது இவர் ஏற்கனவே பார்த்த அனுஷ்கா மாதிரி மாறிவிட்டார். இந்நிலையில் தான் எடை குறைத்த அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். இவருக்கு நியூரிசன் லூக் கோட்டின்ஹோ உதவிகள் செய்துள்ளார் இந்த புத்தகம் எழுதுவதற்கு, ஆங்கிலத்தில் எழுத்த பட்ட இந்த புத்தகத்தை "பென்குயின்" வெளியிட்டுள்ளது.

#anushkashetty #tamilcinemaking