AD

சிறுவர்களை கவரும் - மிஸ்டர் லோக்கல்..!!!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிஸ்டர் லோக்கல் படத்தின் முதல் காட்சி இன்று காலை 6.30 மணிக்கு திரையிடப்பட்டது. சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, யோகிபாபு, ராதிகா சரத்குமார், சத்தீஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். ராஜேஷ் இயக்கியுள்ளார்.

ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் இல்லாமல் இந்த படம் உருவாகியுள்ளது. விளையாட்டில் ஆர்வம் உள்ளவராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோல் நடித்திருந்த கதாபாத்திரம் போல ஒரு பவர் ஃபுல் வேடம்தான் நயன்தாராவிற்கு ஆனால் வில்லி கிடையாது. சிவகார்த்திகேயன் துரத்தி காதல் வலை வீசும் நாயகியாக நயன் வலம் வருகிறார்.

விஜய், அஜித் படத்திற்கு பிறகு சிறுவர்கள் அதிகமாக சிவாவை ரசிக்கின்றனர். இதனால் அவர்களை குதூக்கலப்படுத்தும் வகையில் படத்தில் நிறைய காட்சிகள், காமெடி சரவெடிகள் இருக்கும் என்று சிவா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.

#'Mr.Local #NewMovie #Sivakarthikeyan #Nayanthara #Tamilcinemaking