AD

மீண்டும் லகலகலக... சந்திரமுகி 2 இற்கான கதை ரெடி


தமிழில் பி.வாசு இயக்கிய சந்திரமுகி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி , நயன்தாரா, ஜோதிகா, பிரபு என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர்.
இப் படத்தை இந்தியில் 'பூல் பூலையா' என்ற பெயரில் 2007ம் ஆண்டு ரீமேக் செய்தனர். அக்‌ஷய் குமார், வித்யாபாலன் நடித்திருந்த அப்படம் தமிழைப் 
போலவே இந்தியிலும் நல்ல வசூலையும், வரவேற்பையும் பெற்றிருந்தது.

இந்நிலையில், வெற்றிப்படமான இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் தற்போது பாலிவுட் இறங்கியுள்ளது. இதற்காக பர்ஹத் சாம்ஜி என்பவர் தயார் செய்துள்ள கதைக்கு, தயாரிப்பாளர் பூஷன் குமார் ஓகே சொல்லி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் நடித்த அக்‌ஷய்குமார், வித்யாபாலனே இதிலும் நடிப்பார்களா அல்லது வேறு நடிகர்கள் நடிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பெரும்பாலும் இப்படத்தில் புதுமுக நடிகர்களையே  நடிக்க  வைக்க  திட்டமிட்டிருப்பதாகக்   கூறப்படுகிறது.
விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாக பட வேலைகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

#Chandramukhi2 #Superstar #Rajini #Tamilcinemaking