AD

நயனுக்கே பிடிக்கவில்லையாம்

வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நயன்தாரா, தமிழ் பட உலகின்  முதல் கதாநாயகியாக  வலம்வந்து கொண்டிருக்கிறார். 

படத்தில் நடிப்பதற்கு முன்னரே, தன்னுடைய கதாபாத்திரம் படத்தில் எப்படி வரும்; அது ரசிகர்கள் வரவேற்பைப் பெறுமா என்பது குறித்தெல்லாம், ஆழமாகக் அறிந்த பின் தான் நடிப்பதாலேயே  நயன்தாராவின் படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாகின்றன.

இந்த நிலையில், தான் நடித்தவற்றில் எனக்குப் பிடிக்காத கேரக்டர் என்று ஒன்று உண்டு என கூறி பேட்டியளித்திருக்கிறார். பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

கஜினி படத்தில் நடிப்பதற்கு முன்னும், படத்தின் மொத்த கதையையும் கேட்டுத்தான் நான் நடித்தேன். இருந்தாலும், அதில் வரும் சித்ரா கேரக்டரில் நான் நடித்திருக்கக் கூடாது. 

அந்த கேர்க்டரே எனக்கு பிடிக்காத ஒன்றாகி விட்டது. படத்தின் கதையைச் சொன்ன போது, அந்த கேரக்டர் எப்படி இருக்கும் என்று சொன்னார்களோ, அதன்படி, அந்த கேரக்டரை படமாக்கவில்லை. படமாக்கும்போது, வேறுவிதமாக எடுத்து விட்டனர். அதனால், அந்த கேரக்டரே படத்தில் எடுபடாமல் போய் விட்டது-என்றார்.



#tamilcinemaking #Nayanthara