AD

சில்க் ஸ்மிதாவை உடல் ரீதியாக நாசமாக்கினர்- ஸ்ரீரெட்டி


ஸ்ரீரெட்டியின் கவனம் தற்போது மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா பக்கம் சென்றுள்ளது. நடிகர்களின் பெயர்களை குறிப்பிடாமல் அவர்கள் சில்க் ஸ்மிதாவை சீரழித்ததாக குற்றம் சாட்டியுள்ளார் ஸ்ரீரெட்டி.   

சில்க் ஸ்மிதா பற்றி ஸ்ரீரெட்டி ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, பெரிய ஹீரோக்கள் அவரை உடல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். அத்தகைய சைக்கோக்களை எப்படி லெஜண்டுகள் என்று அழைக்க முடியும்..சினிமா அரசியலால் அவரை இழந்துவிட்டோம்..அவர் ஒரு லெஜண்ட் நடிகை...உங்களை மறக்க மாட்டோம் சில்க் ஸ்மிதா மேடம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரெட்டியின்  இந்த பதிவினை பார்த்த சிலர் அவர் சொல்வது உண்மையாக இருக்கும்... ஆனால் அந்த பெரிய ஹீரோக்களின் பெயர்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்கிறார்கள். சிலரோ  இவருக்கு வேறு வேலையே இல்லை என்கிறார்கள். 

17 ஆண்டுகளில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்த சில்க் ஸ்மிதா கடன் தொல்லையாலும், காதல் தோல்வியாலும் மனமுடைந்து 1996ம் ஆண்டு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் வாழ்க்கை வரலாறு தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் படமாக்கப்பட்டு சூப்பர் ஹிட்டானது. 



டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததன் மூலம் வித்யா பாலனுக்கு மிகப் பெரிய பெயர் கிடைத்தது. அவர் கெரியரில் மறக்க முடியாத படமாக அது அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#SriReddy #SilkSmitha #Tamilcinemaking