AD

கனடா குடியுரிமையை மறுத்த ஆஸ்கார் நாயகன்


கனடா நாடு சிறப்பு குடியுரிமையை கொடுக்க முன்வந்தது என்பதும், அந்த குடியுரிமையை மறுத்து 'இந்தியா தான் எனது குடும்பம் என்று ஒருவர் கூறியவர் ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவிற்கே பெருமை தேடி தந்த நமது தமிழரான ஏ.ஆர்.ரஹ்மான் தான். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவின் மேயர் ரஹ்மான் என்பவர் கனடா நாட்டின் குடியுரிமையை ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு கொடுக்க முன்வந்தபோது அதனை நாகரீகமான முறையில்  மறுத்துள்ளார் நமது ஆஸ்கார் நாயகன். ஏனெனில் அவரது சொந்த மண் தமிழ்நாடு என்பதால்.

இது குறித்து ரஹ்மான்  அவரது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டபோது, 'கனடா நாட்டின் மேயர் எனக்கு குடியுரிமை கொடுக்க முன்வந்ததற்கு நன்றி. நான் அவருக்கு என்றும் கடமைப்பட்டவனாக உள்ளேன். ஆனால் தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்தியாவில் தான் எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் எனது மக்கள் உள்ளனர். நீங்கள் இந்தியாவிற்கு அடுத்தமுறை வருகை தரும்போது எங்கள்இசைப்பள்ளிக்கு வருகை தாருங்கள். மேலும் இந்தியாவும் கனடாவும் இணைந்து இசை நிகழ்ச்சிகளை அதிகமாக வழங்க ஆர்வமுடன் உள்ளேன்' என்று கூறியுள்ளார். 

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பதில்  அவருடைய நாட்டுப்பற்றை தெட்ட தெளிவாக காட்டுகின்றது. கனடா நாட்டின் குடியுரிமையை அவர் மறுத்தபோதிலும் அவரது பெயரில் ஒண்டோரியாவில் ஒரு சாலை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

#arrehman #tamilcinemaking