AD

கர்ப்பிணி ஏமிக்கு நிச்சயதார்த்தம்


நடிகை ஏமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த கோடீஸ்வரரான ஜார்ஜை காதலித்து வந்தார். இந்நிலையில் ஜார்ஜ் தன்னிடம் ப்ரொபோஸ் செய்ததாக புத்தாண்டு அன்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார் . இதையடுத்து கடந்த  மார்ச் மாதம் 31ம் தேதி தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் ஏமி ஜாக்சன்.

இந்நிலையில் நேற்று ஏமி ஜாக்சனுக்கும், காதலர் ஜார்ஜுக்கும்  முறையே நிச்சயதார்த்தம் லண்டனில் நடந்துள்ளது. நிச்சயதார்த்த பார்ட்டியை பிரமாண்டமாக நடத்தி நண்பர்கள், உறவினர்களை அசத்திவிட்டனர். 

பார்ட்டியில் ஏமி, ஜார்ஜுடன் சேர்ந்து டான்ஸ் ஆடினார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.



ஏமி ஜாக்சனுக்கு தனது திருமணத்தை கிரீஸில் நடத்த ஆசையாக  இருப்பதாகவும் ஏமியும், ஜார்ஜும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஏமிக்கு அக்டோபர் மாதம் பிரசவம் நடக்கும். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இது திட்டமிடப்படாத கர்ப்பம். இருப்பினும் பெற்றோர் ஆக நானும், ஜார்ஜும் தயாராகியுள்ளோம் என்று ஏமி முன்பு தெரிவித்தார்.


#amyjackson #amy #amyjacksonengagement #tamilcinemaking