AD

அஜித் - விஜய்யை மிஞ்சிய சூர்யா

செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள என்ஜிகே படம் வரும் மே-31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

இந்த நிலையில் இந்த படத்தின் வெளியீட்டை வெகு விமரிசையாக கொண்டாட தயாராகி வருகிறார்கள் கேரளாவில் உள்ள சூர்யாவின் ரசிகர்கள். 

விஜய், அஜித்துக்கு அடுத்தப்படியாக கேரளாவில் சூர்யாவுக்கு ரசிகர்கள் அதிகமாகவே இருக்கின்றனர்.

 இந்தப் படத்தை கொண்டாடும் விதமாக இதுவரை இந்தியாவிலேயே எந்த நடிகருக்கும் வைக்காத விதமாக சுமார் 210 அடி உயரமுள்ள கட் அவுட்டை உருவாக்கி வருகிறார்கள் சூர்யா ரசிகர்கள்.

இதற்கு முன்பு அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு 190 அடி உயரத்தில் கட்-அவுட் வைக்கப்பட்டிருந்தது தான் சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.



#NGK  #Suriya #Sai_Pallavi #tamilcinemaking