நஸ்ரியாவுக்கு திருமணம் நடக்க நான் தான் காரணம்
அஞ்சலி மேனன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நஸீம் உள்ளிட்டோர் நடித்த மலையாள படமான பெங்களூர் டேஸ் படம் குறித்து நடிகை நித்யா மேனன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பேட்டியின்போது அவர் கூறியதாவது, பெங்களூர் டேஸ் படத்தில் திவ்யாவாக நடிக்குமாறு இயக்குநர் அஞ்சலி மேனன் என்னிடம் தான் முதலில் கேட்டார். என்னால் நடிக்க முடியாத சூழல். அதனால் மறுத்துவிட்டேன். அதன் பிறகே அந்த கதாபாத்திரம் நஸ்ரியாவுக்கு சென்றது.
பின்னர் நடாஷா பிரான்சிஸ் கதாபாத்திரத்தில் நடிக்குமாறு கேட்டார் அஞ்சலி. அந்த கதாபாத்திரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் என்றதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். எல்லாம் நன்மைக்கே நடந்தது. அந்த படத்தில் நடித்தபோது தான் ஃபஹத், நஸ்ரியா இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். நான் திவ்யாவாக நடிக்க மறுத்ததால் தான் உங்களுக்கு கல்யாணம் நடந்தது என்று நான் நஸ்ரியாவிடம் அடிக்கடி கூறுவேன் என்றார்.
#nithyamenon #nazriya #tamilcinemaking
Post a Comment