ஜோகியை வாழ்த்திய ரஜினி
தர்பார் படத்தில் ரஜினியின் உதவியாளராக நடித்து வருபவர் யோகிபாபு. இந்தப் படத்தில் நடிக்க ரஜினி 120 நாட்கள் கால்சீட் கொடுத்துள்ள நிலையில், யோகிபாபு 40 நாட்கள் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், தர்பார் படப்பிடிப்பின்போது ஒருநாள் யோகிபாபு நடித்துள்ள தர்மபிரபு படத்தின் டீசரை பார்த்துள்ளார். அந்தப் படத்தை தான் பார்க்க ஆவலாக இருப்பதாகவும் சொலியிருக்கிறார்.
படப்பிடிப்பில் யோகிபாபுவின் ஈடுபாட்டையும், அவரது நகைச்சுவை நடிப்பையும் பாராட்டியிருக்கிறார் ரஜினி. யோகிபாபுவுக்கு கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது என்றும் வாழ்த்தியுள்ளாராம்.
#yogi_babu #Rajinikanth #Darbar #tamilcinemaking
Post a Comment