AD

கதாநாயகியாகுவதற்கு ஐதராபாத் சென்ற நிவேதா

பாபநாசம் படத்தில்  அக் கதைக்கு திருப்புமுனை தரும் வேடத்தில் நடித்தவர் நிவேதா தாமஸ். 

இந்த வெற்றிப் படத்தில் நடித்த போதும் அதன்பிறகு அவருக்குத் தமிழில் படவாய்ப்புகள் இல்லை. அதனால் தெலுங்கிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில்,  மீண்டும் தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்துள்ளார் நிவேதா தாமஸ். இதையடுத்து தமிழில் புதிய படங்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்திருந்தார். 

தெலுங்கில் இருந்து நிவேதாவுக்கு இரண்டு படங்கள் புக்காகியுள்ளதாம். அதனால் கோலிவுட்டில் தன்னை மகள் வேடங்களுக்கு மட்டும்தான் தேடுவார்கள். ஆனால் டோலிவுட்டில்தான் கதாநாயகியாக நடிக்க வைப்பார்கள் என்பதைப் புரிந்து கொண்டு மறுபடியும் ஐதராபாத்திற்கு பறந்துவிட்டார் நிவேதா தாமஸ்.


 #Niveda_Thomas #tamilcinemaking #