AD

நயனுக்கு பதில் அனுஷ்காவா

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,  தற்போது, அனுஷ்கா ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

முன்னதாக படக்குழு நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீசுடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, படத்திற்கான முதற்கட்ட பணிகளில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு  வருகிறார்.



#anushka_shetty  #nayanthara #tamilcinemaking