AD

தும்பாவுக்கு வந்த சோதனை

நடிகர் தர்ஷன்-நடிகை கீர்த்தி பாண்டியன் இணைந்து நடித்திருக்கும் படம் 'தும்பா'.  கீர்த்தி பாண்டியன், தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகள்.

ஹரீஷ் ராம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசை அமைத்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க பேண்டசி படமாக உருவாகியுள்ள இந்தப்படம் மே 17 ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அறிவித்தபடி 'தும்பா' படம் மே 17 அன்று வெளியாகவில்லை! காரணம்... தும்பாவின் தமிழகவிநியோக உரிமையை வாங்கிய 'கோட்டபடி' ராஜேஷ், மிஸ்டர் லோக்கல் படம் வெளியாவதால் தும்பா படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காது என்ற காரணத்தைச் சொல்லி முட்டுக்கட்டை போட்டுவிட்டாராம். 

தள்ளிப்போன 'தும்பா'வுக்கு  புதிய ரிலீஸ் தேதி கிடைக்காமல் திண்டாடி கடைசியாக ஜூன் 21 ஆம் திகதி தும்பா படம் வெளியாகும் என்ற அதிகார்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.



#Thumbaa  #tamilcinemaking