AD

தல-தளபதி முடிவெடுத்தால் அது சரியே

எந்த முடிவு எடுத்தாலும் அதில் வெற்றி பெற கூடியவர்கள் அஜித் மற்றம் விஜய். இவ்வாறு சொல்கிறார் நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

மான்ஸ்டர் திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, மான்ஸ்டர் திரைப்படம் தனது புதிய பயணத்தின் தொடக்கம் எனவும் தனக்கு இனி நடிக்க நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அஜித், விஜய் ஆகியோர் அரசியலுக்கு வருவார்களா? என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டபோது, அது குறித்து தனக்கு தெரியாது என கூறிய எஸ்.ஜே.சூர்யா, அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதில் வெற்றி பெறக் கூடியவர்கள் என்றார்.



#Vijay  #Ajith_Kumar  #SJSurya tamilcinemaking