AD

என்ன சொல்கிறது ஒத்த செருப்பு

பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம் "ஒத்த செருப்பு". இந்தப் படத்தில் ஒரே ஒரு கேரக்டர்தான் இருக்கிறதாம். அது பார்த்திபன் மட்டும் தான். 

ஒரு வீட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் ஒரு மனிதனின் திகில் அனுபவங்கள் தான் படம் என்கிறார்கள். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய,  ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார். இது குறித்து பார்த்திபன் கூறியிருப்பதாவது,

ஒரே ஒரு பாத்திரம் மாத்திரம் இயங்கும் படங்கள் கூகுளின் கணக்குப்படி உலகில் மொத்தம் 12. அப் பன்னிரெண்டிலும் இல்லாத சிறப்பு இந்தப் படத்தில் இருக்கிறது. எழுதி, இயக்கி, தயாரித்து, நடிப்பதும் ஒரே நபரே. எனவே ஒத்த செருப்பு 12 படங்களில் முதல் இடத்தை பிடிக்கிறது. 

காகிதத்தில் காத்தாடி பறக்கவிட ஆசைப்பட்டவனல்ல நான். நிலவு விட்டத்தில் சூத்திரம் போட்டு வட்ட வடிவப் பட்டம் விட்டு உலகமே உற்றுப் பார்க்கும் பேராசை கொண்டவன். அப்படி ஒரு உலக மகா முற்சிதான் இது. என்கிறார் பார்த்திபன்.


#parthiban #tamilcinemaking