AD

ஹன்சிகாவுடன் சிம்பு - வைரலாகும் புகைப்படம்..!!!

நடிகர் சிம்புவுடன் காதல் வயப்பட்டு பின்பு சிம்புவை விட்டு விலகி இருந்தார் நடிகை ஹன்சிகா. தற்பொழுது சிம்பு மீண்டும் ஹன்சிகாவுடன், படத்தில் இணைந்துள்ள நிலையில், அவரை படக்குழு மாலை போட்டு வரவேற்றுள்ளனர். தமிழில் பல முன்னணி  ஹீரோக்களுடன் பிஸியாக வலம் வந்தவர் தான் ஹன்சிகா.

ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் அவரது மார்க்கெட் சரிய தொடங்க, மீண்டும் அதை தூக்கி பிடித்திட வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த வரிசையில் தற்போது ஹன்சிகா மஹா என்ற படத்தில் நடிக்கிறார். இது அவரின் 50 வது படமாகும். இப்படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களின் இயக்குநர் லக்‌ஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜமீல் இயக்குகிறார். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நீதிமன்றம் வரை இதன் பிரச்சனை சென்றது.
இந்நிலையில் இப்படத்தின் கெஸ்ட் ரோலில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிம்புவை படக்குழுவினர் மாலையிட்டு வரவேற்றனர். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவும் ஹன்சிகாவும் எடுத்து கொண்ட புகைப்படங்களும்  தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது. முன்னதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, நாசர், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், சாயா சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் இப்படத்திற்கு  ஜிப்ரான் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
#Simbu #Hansika #LatestNews #Loveissue #Mahamoive #Tamilcinemaking