AD

அஜித்துக்கு தூது விடும் BIGG BOSS பிரபலம்..!!!

நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறைக்குள் முரட்டு குத்து படத்தில் நடித்தவர். இவர் பிக் பாஸ்  சீசன் 2-வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும் பிக் பாஸ் வீட்டுக்குள் இவர் மகத்துடன் செய்யத சேட்டை  பலரையும்  முகம் சுளிக்க வைத்தது.  ஒரு வழியாக பிக் பாஸ் சர்ச்சைகளிலிருந்து வெளியே வந்த யாஷிகா தற்போது யோகி பாபுடன் 'ஜாம்பி' படத்திலும், மகத்துக்கு ஜோடியாக ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் டிவிட்டரில் நேரலையில் பங்கேற்ற யாஷிகா ரசிகர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர் தல அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள் என்ற  கேள்வி முன் வைத்தார். அதற்கு பதிலளித்த யாஷிகா, எனக்கும் ஆசையாக தான் உள்ளது. நீங்கள் எல்லோரும் அவரிடம் எடுத்து சொல்லுங்கள். அப்போதாவது எனக்கு வாய்ப்பு கிடைக்கிறதா? என்று பார்க்கலாம்' என்று பதிலளித்துள்ளார்.

#YashikaAnnand #AjithKumar #LatestNews #Tamilcinemaking #BiggBoss