AD

திரிஷாவின் பிறந்தநாள் - விஜய் சேதுபதியின் GIFT..!!!!!

நடிகர் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் இணைந்து நடித்த திரைப்படம்‘ 96’. இந்த படம் கடந்தாண்டு வெளியானது. பள்ளிப் பருவ காதலை மையப்படுத்திய கதை என்பதால் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடித்த பொழுது த்ரிஷாவும் விஜய் சேதுபதிக்கும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். இந்நிலையில் த்ரிஷாவுக்காக, விஜய் சேதுபதி என்ன செய்யப் போகிறார் தெரியுமா?
த்ரிஷாவின் பிறந்தநாளை ஒட்டி நாளை ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள் படக்குழுவினர். இந்தப் படத்தை இயக்குநர் திருஞானம் இயக்க, 24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன் தயாரிக்கிறது. இந்த படம் த்ரிஷாவிற்கு 60-வது திரைப்படம். இப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் திரிஷாவின் பிறந்தநாளுக்காக ’பரமபதம் விளையாட்டு’ திரைப்படத்தின் ட்ரைலரை நாளை நடிகர் விஜய் சேதுபதி வெளியிடுகிறார்.
#Trisha #VijaySethupathi #96Movie #BirthdayGift #Tamilcinemaking #பரமபதம் விளையாட்டு