AD

இனி டான்ஸ் ஆடவே முடியாது- தெரிவித்த மருத்துவர்கள்


பாலிவுட் நடிகர்  ரித்திக் ரோஷன் டான்ஸ் ஆடினால் அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்ப்பார்கள். சினிமாத்துறையிலேயே இவரின் ரசிகர்களாக பிரபல நடிகர்கள் உள்ளனர். அவர் சாதாரண ஸ்டெப்ஸை கூட அசத்தலாக போடுவார். அவரது டான்ஸ் மற்றும் அவரின் அழகிற்காகவே எக்கச்சக்க ரசிகர்கள், ரசிகைகள் காணப்படுகின்றனர்.

ஆனால் தற்போது இனிமேல் உங்களால் டான்ஸ் ஆட முடியாது என்று மருத்துவர்கள் தன்னிடம் கூறியதாக  ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார். ஆனால் அதையும் தாண்டி வந்துவிட்டேன். உடல் ஃபிட்டாக இருப்பதற்கு டான்ஸ் ஆடுவது சிறந்த வழி என்று கூறியுள்ளார். அத்துடன் என் அம்மா மற்றும் மகனிற்கும் டான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.அவர்களுக்கும் டான்ஸ் ஆட கற்றுக்கொடுத்துள்ளேன்.

நான் ஆடிய அனைத்து டான்ஸும் எனக்கு பிடிக்கும். அதில் பிடித்தது என்றால் தேவஸ்ரீ கணேஷா, தூம் அகெய்ன், பேங் பேங், ஏக் பல் கா ஜீனா 
ஆகியவை மிகவும் பிடிக்கும். ரித்திக் ரோஷன் சூப்பர் 30 என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். அது கணக்கு புலியான ஆனந்த் குமாரின் வாழ்க்கை வரலாற்று படம். அது தவிர அவர் டைகர் ஷ்கராஃபுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். டைகருக்கு ரித்திக் தான் ரோல் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
#hrithikroshan #hirithikroshandance #tamilcinemaking