மனோரமாவின் 82 ஆவது பிறந்ததின விழா
மறைந்த பிரபல நடிகை மனோரமாவின் 82 ஆவது பிறந்ததின விழா, சென்னை ரஷ்யன் கல்சுரல் அகடாமியில் நடைபெற்றது.
விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் "மனோரமாவின் பெயரில் தமிழக அரசு விருது ஒன்றை ஏற்படுத்தி சிறந்த நகைச்சுவைக் கலைஞர்களுக்கு வழங்க முன் வரவேண்டும். சென்னையில் பிரதான சாலைக்கு மனோரமாவின் பெயரை வைக்க வேண்டும். அவருடைய திருஉருவச் சிலை ஒன்றை அரசு நிறுவ வேண்டும்" என்ற 3 கோரிக்கைகள் வேண்டுகோளாக முன் வைக்கப்பட்டது.
கோரிக்கைகளை தொழிலதிபர் நல்லி குப்புசாமியும், கே.பாக்யராஜும் வலியுறுதிப் பேசினார்கள்.
இயக்குநர் கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நடிகை எஸ்.என்.பார்வதி, ஸ்ரீகவி, எஸ்.சந்திரமௌலி, ஸ்ரீனிவாசன் கண்ணதாசன், மெய் ரூஸ்வெல்ட் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
மனோரமாவின் மகன் பூபதி, மருமகள் தனலட்சுமி மற்றும் மனோரமாவின் பேரன் பேத்திகள் அனைவரும் விழாவிற்கு வந்தவர்களை வரவேற்று, நன்றி கூறினார்கள்.
#Manorama #Bhagyaraj #tamilcinemaking
Post a Comment