பாலிவுட் வில்லனோடு மோதும் ஜெயம்ரவி
இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில், ஜெயம் ரவியின் கோமாளி தற்போது வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
சுஜாதா விஜயகுமார் தயாரிக்க, ஜெயம் ரவியின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகப்போகும் படம் இதுவாகும்.
படத்தில் அவருக்கு ஜோடியா பாலிவுட் நடிகை நித்தி அகர்வால் நடிக்கும் செய்திகள் சமீபத்தில் வெளியானது. இப்போது ஜெயம் ரவியோடு மோதப் போகும் வில்லன் ரோனித் ராய் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ரோனித் ராய் தென்னிந்திய மொழிகளில் அதிகம் நடித்திராத ஒரு பாலிவுட் நடிகர். சிறந்த வில்லன் நடிகராக பல விருதுகளை வாங்கியவர். தற்போது ஜெயம்ரவி படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
#Nidhhi_Agerwal #Nidhhi_Agerwal #Ronit_Roy #tamilcinemaking
Post a Comment