AD

வெறித்தனமான பெயர் தளபதி 63

அட்லி தற்போது விஜய்யை வைத்து ‘தளபதி 63' படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இவர்களுடன் கதிர், ஜாக்கி ஷெராப், இந்துஜா, யோகி பாபு, விவேக், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தளபதி 63 படத்திற்கு வெறி, வெறித்தனம், மைக்கேல், கேப்டன் மைக்கேல் உள்ளிட்ட பெயர்களில் ஒன்றைத் தலைப்பாக அறிவிப்பார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 

விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் இதில் கால்பந்தாட்ட பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை திரையிடப் படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.



#Atlee  #Vijay  #Nayanthara  #Yogi_Babu