AD

கோபத்தில் நடிகை லைலா..!!!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான ஆரம்பக்கட்டப்பணிகள் தொடங்கி உள்ளது. முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா, ஆரவ், ரைஸா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சி மூலம் பெரும் புகழ் பெற்றனர். இரண்டாவது சீசனில் ரித்விகா, ஐஸ்வர்யா தத்தா, தாடி பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதல் சீசனுக்கு இருந்த வரவேற்பு இரண்டாவது சீசனுக்கு இல்லை என்றாலும் அதுவும் வெற்றிகரமான நிகழ்ச்சியாகவே அமைந்திருந்தது.
முதலி கமலுக்குப் பதில் இந்நிகழ்ச்சியை நடிகை நயன்தாரா நடத்தப்போகிறார் என்று செய்திகள் வந்த நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு கமலே நடத்துகிறார் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மூன்றாவது சீஸனில் கலந்து கொள்ளவிருக்கும் குடும்ப அங்கத்தினர்கள் குறித்த சில யூகங்கள் கசிய ஆரம்பித்துள்ளன.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்துவரும் மகேந்திரன், ’காலா’, ’விஸ்வாசம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த சாக்‌ஷி அகர்வால், ’ராஜா ரங்குஸ்கி’, ’வில் அம்பு’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த சாந்தினி தமிழரசன், ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.
ஓவியாவின் இடத்தில் கன்னகுழியழகி லைலாவை சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம் என்று தகவல் வெளியாகி இருந்த நிலையில் நடிகை லைலா இதை மறுத்து ஒரு பதிவை  தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார், அதில் இதை யாரும் நம்ப வேண்டாம் இது முற்றிலும் தவறான செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்.

#biggboss #season3 #kamal #laila #tamilcinemaking