AD

கவர்ச்சிக்கு No சொல்லும் நடிகை வாணிபோஜன்...!!!

தெய்வமகள் தொடரில் மூலம் மிகவும் புகழ் பெற்றவர் நடிகை வாணிபோஜன். தற்பொழுது சின்னத்திரை டு சினிமா என்ட்ரி கொடுக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. லேட்டஸ்ட் என்ட்ரியாக வாணி போஜன் சினிமாவில் களமிறங்கியிருக்கிறார். தமிழில் நடிகர் வைபவ்வுடன் ஒரு படம், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் தருண் பாஸ்கர் ஜோடியாக ஒரு படம்... என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருகிறார் வாணி போஜன்.
இவர் சீரியலுக்கு வர்றதுக்கு முன்னாடி மாடலிங் பண்ணிகொண்டிருந்தவர். அப்போவே சினிமா வாய்ப்புகள் அவருக்கு வந்தன. ஆனால் அவர் நடிக்கவில்லை. அதன் பிறகுதான்தெய்வமகள்' சீரியல் நடித்துள்ளார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அந்த சீரியல் வெற்றிகரமா ஒளிபரப்பானதோடு, அவருக்கும் நல்ல பெயர் கிடைச்சது. ஒரு வருடம் பிரேக் எடுத்துக்கிட்டு பாரீஸ், சிங்கப்பூர், ஶ்ரீலங்கானு டூர் போயிட்டுவந்துள்ளார்.  சீரியலா, சினிமாவாங்கிற குழப்பம் இருக்க, ஒருவழியா சினிமாவுக்கு okay சொல்லி இப்பொழுது பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.

``சீரியலோ, சினிமாவோ... கிளாமருக்கு முக்கியத்துவம் தர கதாபாத்திரம் இவருக்கு பிடிக்காதாம். பசங்களுக்கும் ஹோம்லி பொண்ணுங்களைத்தான் பிடிக்கும். படத்துக்குத் தேவைன்னா பண்ணலாம்; இல்லைனா தேவையில்லை. தவிர, கிளாமர்ங்கிற விஷயம் நம்ம உடம்புலதான் இருக்கணும்னு இல்லை. நம்ம முகத்துல, சிரிப்புல இருந்தா போதும்" என்கிறார் நடிகை வாணிபோஜன்.
``கடந்த  ஐந்து வருடமா இவர் யோகா செய்கிறார். தினமும் ஒரு மணிநேரம் அதுக்காகச் செலவழிகிறாராம் மத்தபடி, ஜிம்ல வொர்க் அவுட் பண்ற பழக்கமில்லை, இவர்க்கு டான்ஸ் நன்றாக ஆட தெரியுமாம்" என்கிறார் வாணி போஜன்.
#vanibhojanserial #suntv #vijaydevarakonda #vaibhav #sathya #thevathirumakal #tamilcinemaking