AD

கெட்ட ராசி உடையவரா? ப்ரியா ஆனந்த்


இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் ஸ்ரீதேவி, ப்ரியா ஆனந்துடன் நடித்தார். தற்போது ஸ்ரீதேவி உயிருடன் இல்லை. எல்.கே.ஜி. படத்தில் ஜே.கே. ரித்தீஷ் ப்ரியா ஆனந்துடன் நடித்தார். ஜே.கே. ரித்தீஷ் தற்போது இறந்துவிட்டார்.
இவ் விடயத்தை ஆணழகன் என்பவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ப்ரியா ஆனந்துடன் சேர்ந்து நடிப்பவர்கள் இறக்கிறார்கள். சக கலைஞர்களுக்கு கெட்ட ராசியின் அடையாளமா ப்ரியா ஆனந்த் என்று   ட்வீட் செய்தார்.

ஆணழகனின் ட்வீட்டுக்கு ப்ரியா ஆனந்த் பின்வருமாறு பதில் அளித்திருந்தார். நான் வழக்கமாக உங்களை போன்றவர்களுக்கு பதில் அளிப்பது இல்லை. ஆனால் நீங்கள் தெரிவித்த விஷயம் மோசமானது என்பதை உங்களுக்கு புரிய வைக்க விரும்புகிறேன். உங்களை நான் பதிலுக்கு தரக்குறைவாக பேச மாட்டேன் என்றும் உங்கள் ட்விட்டர் கணக்கின் பெயர் அன்பு என்று உள்ளது. அது உங்களுக்கு ஒரு நாள் கிடைக்கும் என்று நம்புகிறேன். அன்பு என்கிற ஒரு விஷயத்தால் மட்டுமே இந்த உலகம் இயங்குகிறது என்றும் ப்ரியா ஆனந்த் கூறியுள்ளார்.

இவ்வாறு ப்ரியா ஆனந்தை காயப்படுத்தியதிற்கும் அந்த ட்வீட்டை பதிவிட்டவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.
“என் தவறை உணர்ந்துவிட்டேன். இன்று நான் எல்.கே.ஜி. மற்றும் இங்கிலிஷ் விங்கிலிஷ் பார்த்தேன். இரண்டு படங்களிலும் நீங்கள் நடித்திருந்ததால் அந்த கேள்வி எழுந்தது. அதனால் அப்படியே ட்வீட் செய்தேன். 
நீங்கள் ட்வீட்டுகளை பார்க்க மாட்டீர்கள் என்று நினைத்தேன். உங்களை காயப்படுத்தியதற்கு சாரி” 

#PriyaAnand #Priyaanandtweet #tamilcinemaking