AD

சசிகலாவாகும் சாய்பல்லவி

தியா படத்தைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் சாய்பல்லவி நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. எனினும் அந்தச் செய்தியை மறுத்துள்ளார் சாய்பல்லவி.

இது குறித்து, சாய்பல்லவி தெரிவித்ததாவது, 

தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடிப்பது  தொடர்பில்  இதுவரை விஜய் என்னை அணுகவில்லை. அத்தோடு, சசிகலாவாக நடிப்பதற்கு ஏற்ற முகம் என்னிடம் இல்லை என்றே நினைக்கிறேன். அதையும் மீறி என்னை நடிக்குமாறு இயக்குநர் வற்புறுத்தினால் அப்போது அதுபற்றி யோசிப்பேன் என்றார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் இந்த படத்தில், ஜெயலலிதாவாக ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


#Sai_Pallavi, #ALVijay, #tamilcinemaking