AD

10 கோடியைக் கடந்தது விஜய் பாடல்

விஜய் மூன்று வேடங்களில் நடித்து வெளிவந்த மெர்சல் சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தில் இடம் பெற்ற, ஆளப் போறான் தமிழன் பாடல், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. 

ஆளப் போறான் தமிழன் பாடல்  தற்போது, 9 கோடியே 99 லட்சம் பார்வைகளுடன் உள்ளது. விரைவில் 10 கோடி பார்வைகளைத் தொடும் என செய்தி வெளியாகியிருந்தது.

அதன்படி நேற்று இரவு இப்பாடல் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

முதல் இடத்தில் மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


#Mersal, #Vijay, #aalaporaan, #thamizhan, #tamilcinemaking