AD

காக்டெய்லில் ஹீரோவாகும் யோகி

நகைச்சுவை நாயகனாக வலம்வந்த யோகிபாபு தற்போது, பல படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.

தற்போது, காக்டெய்ல் என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிக்கிறார். 

யோகிபாபு உடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம்கோபி, சாமிநாதன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது.  

ஒரு பறவையை மையமாகக் கொண்டதாக அமைந்துள்ளது படத்தின் கதை. அந்தப் பறவையின் பெயர்தான் காக்டெய்ல். யோகிபாபு, நாய்களுக்கு முடிவெட்டும் தொழில் செய்பவராக இதில் நடித்துள்ளார். 

படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்புக்கள் முடிவடைந்துள்ளது என்கிறார் தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா.


#Yoki_babu, #Sayaji_Shinde, #Manobala, #tamilcinemaking