AD

பிக்பாஸ் 3 பாகத்தை தொகுத்து வழங்க இருக்கும் நடிகர் கமலின் சம்பளம் எவ்வளவு தெரியுமா...!!

விஜய் தொலைக்காட்சியில், 2017 ஜூன் 25 அன்று பிக்பாஸ் முதல் பாகம் தொடங்கி நூறு நாட்கள் ஒளிபரப்பாகியது. இதில் காயத்திரி, சக்தி, நமீதா, ரைசா இவர்களுடன் ஓவியா மற்றும் ஆரவ் என்று நட்ச்சத்திர பட்டாளமே இருந்தது. ஆனால் ஓவியாவுக்கு மட்டும் நிறைய ரசிகர்கள் சேர்ந்தார்கள். அதன் பிறகு இரண்டாம் பாகம், 2018 ஜூன் 17 முதல் ஒளிபரப்பப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளையும் நடிகர் கமல் தொகுத்து வழங்கினார். இந்த இரு சீசன்களில் முதல் சீசன் மட்டும் மகத்தான வெற்றியைப் பெற்றது. இரண்டாவது சீசன் பேசப்பட்டது ஆனால் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது உண்மைதான்.
பிக்பாஸ் 1 மற்றும் 2 ஆகிய இரு சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு சினிமாவில் நாயகனாக நடிக்க வாங்கிய சம்பளத்தைக் காட்டிலும் அதிகம் வாங்கியதாக கூறப்பட்டது. இவ்வாண்டும்  இந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் தயாராகவுள்ளது. இந்நிகழ்ச்சி இம்முறை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டு  நிலையில், மீண்டும் விஜய் தொலைக்காட்சியே இந்த நிகழ்ச்சியை கை பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் நடிகர் கமல்தான் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறாராம். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்தில், தனக்கு ஒரு நாளுக்கு ஒரு கோடி வீதம் நூறு கோடி சம்பளம் வேண்டுமென்று விஜய் டீவியிடம் நடிகர் கமல் கேட்டுள்ளார். இதனால் விஜய் டீவியின்  நிறுவனம் அதிர்ச்சியடைந்தாலும். விளம்பர வருவாய் கோடிக் கணக்கில் வருவதால்  ஒப்புக்கொள்ளும் முடிவில் உள்ளதாம். இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.


#Bigboss #Bigboss3 #Kamalahhasan #Oviya #Namitha #Vijaytv #Tamilcinemaking