AD

சசிலலிதா வாழ்கை வரலாற்றில் நடிகை அமலாபால்...!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போகிறோம் என்று இதுவரைக்கும்  6 பேர் அறிவித்துள்ளனர். அதில் ஏ.எல். விஜய் இயக்கும் தலைவி படத்தில் பாலிவுட் நடிகை "கங்கனா ரனாவத்" ஜெயலலிதாவாக இதில் நடிக்கிறார். ப்ரியதர்ஷினி இயக்கும் அயர்ன் லேடி படத்தில் "நித்யா மேனன்" ஜெயலலிதாவாக நடிக்கிறார்.
சசிலலிதா படத்தில் பாலிவுட் நடிகை "கஜோல்" மற்றும் "அமலா பாலை" நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குநர். சசிலலிதா படத்தில் பாலிவுட் நடிகை கஜோலை ஜெயலலிதாவாகவும், அமலா பாலை சசிகலாவாகவும் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம். ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் அமலா பால். இப்படத்தில் அமலா பால் சசிகலாவாக நடிக்க ஒப்புக் கொள்வாரா என்றுதான் தெரியவில்லை.

#Kajol #AmalaPaul #Sasilalitha #JayalalithaBiopic #TheIronLady #JegatheeswarReddy #Tamilcinemaking