AD

மனிஷாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!!!

நடிகை மனிஷா கொய்ரலா நேபாள நாட்டின் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் . நடிப்பின் மீது கொண்ட காதல் காரணமாக திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்தார். முதலில் நேபாள மொழி படத்தில்தான் அறிமுகம் ஆனார். ஆனால் இவரை பிரபலமாக்கியது ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற "1942 ஏ லவ் ஸ்டோரி" திரைப்படம் தான்.  இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, பல பாலிவுட் படங்களில் நடித்தார்.
மணிரத்தினம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அவரின் நடிப்பில்  பம்பாய், இந்தியன், முதல்வன், உயிரே, பாபா என பல வெற்றி படங்களில் நடித்து இருந்தார். இவர் 2010 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் சாம்ராட் என்பவரை திருமணம் செய்து கொண்டடார். சமூக
வலைத்தளத்தில் இவர் போட்ட ஒரு பதிவால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு  இரண்டு வருடத்தில், விவாகரத்து பெற்று பிரிந்தார்.
பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக  சிகிச்சைக்கு வெளிநாடு சென்று வெற்றியுடன் திரும்பினார். தற்போது புற்றுநோய் விழிப்புணர்வு சம்பந்தமாக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் இவரை புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதி அமைப்பின் சார்பில்,  நேபாள நாட்டின் நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் இவருக்கு கிடைத்த இந்த புதிய பதவியால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இவருக்கு தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

#tamilcinema #manishakoirala #kollywood #bollywood #tamilcinemaking