AD

தமிழிலும் லூசிபர்

கடந்த மாதம் மலையாளத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் லூசிபர் தற்போது தமிழில் வெளிவரவுள்ளது.

மோகன்லால் நடிப்பில், நடிகர் பிருத்விராஜ் இயக்கிய படம். மோகன்லாலுடன், பிருத்விராஜ், விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித், சசிகுமார், ஜான் விஜய் உள்பட பலர் இதில் நடித்திருந்தனர். 

தீபக் தேவ் இசை அமைக்க,  மேக்ஸ்லேப் சினிமா சார்பில் ஆன்டனி பெரும்பாவூர் 60 கோடியில் தயாரித்திருந்தார். படம் 150 கோடி வசூலித்து இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கா அரசியல் கதை. 

தற்போது இந்தப் படத்தை தமிழில் வெளியிடுகிறார்கள். மோகன்லால், பிருத்விராஜ், சாய்குமார், டொவினோ தாமஸ், ஜான் விஜய் என எல்லோருமே தமிழுக்கு நன்கு அறிமுகமான முகங்கள் என்பதால் இந்த முயற்சி. வி.கிரியேஷன் நிறுவனம் வருகிற 3 ஆம் திகதி வெளியிடுகிறது.


#Mohanlal, #Prithviraj, #Vivek_Oberoi, #Manju_Warrier, #tamilcinemaking