AD

தர்பார் படப்பிடிப்பிற்கு கிளம்பும் ரஜினி! புகைப்படம் உள்ளே!


இன்று தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எ. ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு தர்பார் என்று தெரியவந்தது. படத்தின் 1st லுக் போஸ்டரில் படத்தை பற்றிய பல விஷயங்களை தெரிவித்திருந்தார்கள். படத்தில் ரஜினி காவல் அதிகாரி என்பதையும் போஸ்டர் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. மேலும், படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று போஸ்டரில் தெரியப்படுத்தியிருந்தார்கள். படத்தின் கதை களம் மும்பை சார்ந்த இடங்களில் தான் எடுக்கப்படுகிறது.


படத்தில் இரு கதாபாத்திரங்களில் ரஜினி நடிப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. மேலும், படத்தில் நயன்தாரா தான் கதாநாயகியாக நடிக்கிறார். அத்தோடு இருவருக்கும் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினி ஹைதராபாத் செல்ல போகிறார். படப்பிடிப்பிற்காக ரஜினி கிளம்பும் புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், தன் தந்தை படப்பிடிப்பிற்காக கிளம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.



#rajinikanth #darbar #rajinikanthshootstarts #Nayanthara #nivethathomas #ARMurugadoss #Anirudh #Darbar #Rajinikanth167 #thalaivar167 #Rajinikanthnext movie