AD

அரசியலுக்கு யார் வரலாம் - சேதுபதி

யாருக்கு அறிவும், மக்களுக்கு சேவை செய்யும் மன பக்குவம் உள்ளதோ அவர்கள் அரசியலுக்கு வரலாம், தேர்தலின் போது  பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது தவறானது. இவ்வாறு கூறியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

மதுரையில் கடைத்திறப்பு விழா ஒன்றுக்காக வந்திருந்த விஜய் சேதுபதி,பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

வெள்ளித்திரை நடிகர்கள் சின்னத்திரை வருவது வரவேற்கதக்கது. இங்கு சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர்கள் என்ற பாகுபாடு கிடையாது. வாக்களிப்பது உரிமை, கடமை அதைத் திரைப்பட நடிகர் செய்வது வரவேற்கதக்கது.

வாக்குப் போடுவது குறித்த விழிப்புணர்வு நடிகர்களுக்கு இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

அறிவாந்தவர்கள் மட்டும் அரசியலில் வந்தால் மட்டுமே போதுமானது. என்கிட்ட இதுகுறித்து கேட்க வேண்டாம். அணில் சேமியா விளம்பரத்தில் கிடைத்த ஊதியத்தில் எந்த கிராமத்தையும் தத்தெடுக்கவில்லை அது முற்றிலும் தவறான செய்தி.

தேர்தலின் போது பல வருடங்களாக பணம் கொடுக்கிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது தவறானது என்று பலமுறை கூறியுள்ளேன்.

சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் தவறான செய்திகள் மிக விரைவாக பரவுவதை தடுத்து பாதுகாப்பாக கையாளவேண்டும்.

சாதி மாற்றி திருமணம் செய்தோர் மகிழ்ந்து வாழும் வாழ்வியலை யாரும் விளம்பரம் செய்யாத நிலையில், டிக்டாக் போன்றவற்றிற்க்கு தடை விதிப்பது குறித்து விளக்கம் கூற இயலாது.

யாருக்கு அறிவும், மக்களுக்கு சேவை செய்யும் மன பக்குவம் உள்ளதோ அவர்கள் அரசியலுக்கு வரலாம்-என்றார்.


#Vijay_Sethupathi, #election, #tamilcinemaking