AD

அக்காவை பின் தொடரும் தங்கை...!!!

ஜான்வி பாலிவுட் திரைபட உலகில் 'தடக்' படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஆவார். தற்போது ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளும் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இவரை பிரபல இயக்குனர் கரண் ஜோகர் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை ஸ்ரீதேவியின் இரண்டு மகள்களுமே... தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிதான்  வருகின்றனர். மூத்த மகள் ஏற்கனவே ஜான்வி பாலிவுட் திரையுலகில் ஒரு நடிகையாக நிலையான இடத்தை பிடித்துள்ளார்.  தற்போது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் கதையை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார்.
அவரைத் தொடர்ந்து ஜான்வியின் தங்கை குஷி கபூரும் தற்போது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.  அவரை சித்தார்த் மல்ஹோத்ரா,ஆலியா பட், வருண் தவான், உள்ளிட்ட பல பிரபலங்களை அறிமுகம் செய்த கரண் ஜோகர் அறிமுகப்படுத்தவுள்ளார்.

#sridevi #tamilcinemaking #kollywood #jhanvikapoor #thadak #kushikapoor