AD

ஜெயலலிதா வேடத்திற்கு நான் மட்டும் தான் பொருந்துவேன் - பிரபல நடிகை..!!!

கலியூஞ்சல் படம் மலையாளத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியானது. இதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இவர் ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். நடிகர் நிவின் பாலி நடித்த  'ஒரு வடக்கன் செல்பி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தற்போது மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மஞ்சிமா மோகன், நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமான ' அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, இவருக்கு தமிழ் மொழியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சத்திரியன், இனிமே இப்படித்தான் ஆகிய படங்கள் இவருக்கு வெற்றி படமாக  தற்போஅமையவில்லை. தற்பொழுது தேவராட்டம் படத்திலும், அது மட்டும் இல்லாமல் நடிகர் ஜீவாவுடன் பெயரிடாத படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக ஏற்கனவே மஞ்சிமா மோகன் கூறியிருந்தார். இதை தொடர்ந்து  "ஜெயலலிதாவின் கேரக்டருக்கு மிகவும் பொருத்தமாக நான் இருப்பேன் என்று இயக்குனர் கெளதம் மேனன் கூறினார்".
ஜெயலலிதாவின் சாயல் என்னிடம் பல உள்ளதாக கூறி, கெளதம் மேனன் இயக்கி வரும் வெப் சீரிஸில் நடிக்க அழைத்தார். அப்போது பிஸியாக  மூன்று படங்களில் நடித்து கொண்டு  இருந்ததால் நடிக்க முடியவில்லை. எனினும் ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தில் நடிக்க இப்ப தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.


#Manjimamohan #Jayalalithabiopic #manjimamohanactlike #Tamilcinemaking