AD

நண்பன் ஜே.கே.ரித்தீஷ் மரணத்துக்கு விஷால் இரங்கல்...!!!

முன்னாள் நடிகரும் முன்னாள் பாராளுமன்ற எம்பியுமான ஜே.கே.ரித்திஷ் சற்றுமுன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46 ஆகும். இவர் நாயகன், பெண் சிங்கம்,கானல் நீர்,  ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறியிடத்தக்கது.  நடிகர் ரித்தீஷ் சமீபத்தில் வெளியான ஆர்ஜே. பாலாஜியின் "எல்.கே.ஜி"படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் சற்றுமுன் அவர் மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளிவந்துள்ளது.

46 வயதில் முதல் மாரடைப்பிலேயே ரித்தீஷ் மரணம் அடைந்தது குறித்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சங்க செயலாளரும் ரித்தீஷின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான விஷால் தனது சமூக வலைத்தளத்தில் அவருடைய மறைவு குறித்து பதிவு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.
"வாழ்க்கை என்பது எதிர்பாராததன் உச்சம், என்னுடைய நல்ல நண்பர் ரித்தீஷின் மரணத்தை என்னால் நம்பவே முடியவில்லை!!! பெரும் அதிர்ச்சியாக உள்ளது!!! நடிகர் சங்க தேர்தலின்போது அவரை பற்றி நான் நன்கு புரிந்து கொண்டேன். ரித்தீஷை இழந்து வாடும் அவருடைய மனைவிக்கும் குழந்தைகளுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். கடவுள் அவர்களுக்கு மன உறுதியை கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய நண்பன் ரித்தீஷின் ஆன்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்திக்கின்றேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

#Vishal #J. K. Rithesh #Tamilcinemaking