AD

நடிகர் அஜீத்தின் மகளின் படம் ஒன்று வைரலாகி வருகிறது..!!

நடிகர் அஜீத்தின் மகள் அனோஷ்கா அவரது அம்மா ஷாலினியுடன் நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி பிறந்த அனோஷ்காவுக்கு தற்போது 11 வயது ஆகின்றது. இவரை அடுத்து ஆத்விக் 2015ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பிறந்தார். அஜீத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு இவர்கள் மிக அபூர்வமாகவே வருவார்கள்.
ஆனால் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் தனது பெரும்பாலான நேரங்களை மனைவி குழந்தைகளுடனே செலவிடுவார் நடிகர் அஜித். தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன் டப்பிங்குக்காக காத்திருக்கும் அஜீத், வரும் 18ம் தேதியன்று தேர்தலில் வாக்களித்துவிட்டுக் குடும்பத்தினருடன் வெளிநாடு பயணம் செல்லத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

#thala #ajith #shalini #anoshka #nerkondapaarvai #ajithfamily #tamilcinemaking