AD

கமலின் மூன்றாம் உறுதி மொழி! ஆதரவு கொடுக்கும் மக்கள்


தமிழ் புத்தாண்டிற்கான வாழ்த்துக்களை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு அரசியல் களம் காணும் கமலா ஹாசனும் அவரது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இனிய தமிழ்ப் புத்தாண்டு புரட்சிப் புத்தாண்டாக மலரவும், தமிழும் தமிழரும் சிறக்கவும் செழிக்கவும் வாழ்த்தும் உங்கள் நான் என்று கூறியதோடு அவரின் மூன்றாவது உறுதி மொழியை தெரிவித்துள்ளார்.

அவரது முதல் இரண்டு உறுதி மொழி என்றால் அது, குடிநீர் பிரச்னையை தீர்ப்பேன் என்பதும், வேலையின்மையை தீர்ப்போம் என்பதும் ஆகும். இந்த நிலையில் தற்போது குடிசை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவேன் என்று கமல் ஹாசன் அவரது மூன்றாம் உறுதி மொழியை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த உறுதி மொழியை கேட்ட மக்கள் காமலிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.


#kamal3rduruthimoli #kamalhaasan #kamalspeech #kamalinterview #kamallatestinterview